அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் நாளை வெளியீடு!
அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் நாளை வெளியீடு!
‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். படத்தை இயக்குநர் சிவா இயக்குகிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் முதன் முதலாக ரஜினி படத்துக்கு இசை அமைக்கிறார்.
‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா பகுதிகளில் நடந்து முடிந்தது.
தீபாவளி பண்டிகையில் அண்ணாத்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன. ரஜினிகாந்த் டப்பிங் பேசி முடித்துவிட்டார்.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி நாளை காலை 11 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டரும், மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த படம் தயாராகிறது. அண்ணன் - தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
#Annaatthe thiruvizha aarambam!#AnnaattheFirstLook Tomorrow @ 11 AM | #AnnaattheMotionPoster Tomorrow @ 6 PM@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheFLTomorrow pic.twitter.com/RTOr8SFqWE
— Sun Pictures (@sunpictures) September 9, 2021