வெளியானது வெற்றிமாறனின் விடுதலை ஃபர்ஸ்ட் லுக்: விஜய் சேதுபதி மிரட்டல் போஸ்டர் வெளியீடு!
வெளியானது வெற்றிமாறனின் விடுதலை ஃபர்ஸ்ட் லுக்: விஜய் சேதுபதி மிரட்டல் போஸ்டர் வெளியீடு!
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான சூரி, கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநரான வெற்றிமாறனின் படத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே.ஜெயமோகன் எழுதிய துணைவன் எனும் சிறுகதையை மையமாக வைத்து படத்தை இயக்குவதுடன், தயாரிக்கவும் செய்து கொண்டிருக்கிறார் வெற்றிமாறன்.இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவில் இந்தப் படத்திற்கு இசையமைக்கப்பட்டுள்ளது
சூரி இதுரை இல்லாத அளவு இந்த கெட் அப்பில் இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்திற்கு விடுதலை என்று தலைப்பு வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். ஒரு போஸ்டரில் சூரி போலீஸ் உடையில் கம்பீரமாக நிற்கிறார். மறு போஸ்டரில் விஜய் சேதுபதி வில்லங்கமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.
Here it is @VetriMaaran ‘s #Viduthalai first look posters.#Ilaiyaraja @sooriofficial @elredkumar @rsinfotainment @VelrajR @mani_rsinfo @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/DxfKG1Lv9m
— VijaySethupathi (@VijaySethuOffl) April 22, 2021
newstm.in