முதல்ல எனக்கு கல்யாணம் அப்புறம் தான் உனக்கு. என் கஷ்டம் உனக்கு புரியுதா? வைரலாகும் சிம்பு வீடியோ

முதல்ல எனக்கு கல்யாணம் அப்புறம் தான் உனக்கு. என் கஷ்டம் உனக்கு புரியுதா? வைரலாகும் சிம்பு வீடியோ

Update: 2021-02-15 15:36 GMT

தமிழ் திரையுலகில் நடிப்பில் தனிமுத்திர பதித்தவர் நடிகர் சிம்பு.சமீபத்தில்  சிம்புவின் நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. அவர்  தற்போது மாநாடு மற்றும் பத்து தல படப்பிடிப்புகளில் பிசியாக நடித்து வருகிறார்.

அவருடைய நடவடிக்கைகளை அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைரலாக்குவது சிம்புவின் வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் சிம்பு சகோதரியின் மகன் அவருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த வீடியோ வைரலானது. நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு சிம்பு தனது செல்லப்பிராணி நாய் கோகோவுடன் வேடிக்கையாகப் பேசி கொஞ்சி விளையாடிய வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “முதல்ல எனக்கு கல்யாணம் நடக்கணும், அப்புறம் தான் உனக்கு. நான் மட்டும் தனியா இருக்கும் போது நீ ஜாலியா இருந்தா அது நியாயம் கிடையாது.  என் கஷ்டம் உனக்கு புரியுதா? என்ன அப்படி பார்க்கிறாய் .. எனக்கு திருமணம் ஆகிடும்னு சொல்ல வர்றியா? ஆகாதுனு சொல்ல வர்றியா?. ஓ ஆகிடும்னு சொல்றியா?” என சிம்பு பேசும் வசனங்களும், அதற்கு அந்த நாய் கொடுக்கும் ரியாக்க்ஷன்களும் பார்ப்பவர்களை ரசிக்கும் படியாக உள்ளது.

Tags:    

Similar News