டிசம்பர் 15 முதல் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை..!!
டிசம்பர் 15 முதல் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை..!!
முதன்முதலாக சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் சர்வதேச போக்குவரத்தை ஒன்றிய அரசு நிறுத்தியது.
தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் தற்போது வரை விமானபோக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. “ஏர் பபுள்” என்ற கொரோனா தடுப்பு விதிகளுடன் 25 நாடுகளுக்கு மட்டும் விமான சேவையை இயக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது தொற்று பரவல் குறைந்து பெரும்பாலான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து டிசம்பர் 15-ம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானசேவை தொடங்கும் என ஒன்றிய விமான போக்குவரத்துறை அறிவித்துள்ளது. வெளிநாடுகளை 3 வகையாக பிரித்து அதற்கேற்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.