பறக்கும் கார் - 170 கி.மீ வேகத்தில் வானில் பறந்த ஏர்-கார்!!

பறக்கும் கார் - 170 கி.மீ வேகத்தில் வானில் பறந்த ஏர்-கார்!!

Update: 2021-07-01 21:21 GMT

ஸ்லோவேக்கியா நாட்டை சேர்ந்த பேராசிரியர் ஸ்டீபன் க்ளீன் என்பவர் பெட்ரோலில் இயங்கும் நவீன ஏர்- காரை வடிவமைத்துள்ளார்.

பார்ப்பதற்கு பெராரி கார் போல் காட்சியளிக்கும் இந்த பறக்கும் கார் இரண்டேகால் நிமிடத்தில் விமானமாக மாறி விடும். பிஎம்டபிள்யூ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த ஏர் கார் மூலம் வானில் 190 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஜூன் 28 அன்று நைட்ராவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கும் பிராட்டிஸ்லாவாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கும் இடைப்பட்ட 80 கிலோ மீற்றர் தூரத்தை இந்த ஏயர்கார் 35 நிமிடங்களில் சென்றடைந்துள்ளது.

அதன் படைப்பாளரான பேராசிரியர் ஸ்டீபன் க்ளீன், இது சுமார் 1,000 கி.மீ, 8,200 அடி உயரத்தில் பறக்கக்கூடும் என்றும், இதுவரை 40 மணி நேரம் காற்றில் பறந்து சோதனைகளை வெற்றிகராக நிறைவு செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், இந்த ஏர் காரை தயாரிக்க பதினேழரை கோடி ரூபாய் செலவானதாக பேராசிரியர் ஸ்டீபன் க்ளீன் தெரிவித்துள்ளார்.

ஏர் கார், காரிலிருந்து விமானமாக மாற்றடைவதற்கு இரண்டு நிமிடங்கள் 15 வினாடிகள் எடுக்கும். இதனால் இரண்டு நபர்களை சுமந்து செல்ல முடியும் என்பதுடன் அதிகூடிய மொத்த எடை வரம்பு 200 கிலோ கிராம் ஆகும். எனினும் ட்ரோன் - டாக்ஸி போன்று செங்குத்தாக ஏர் காரை தரையிறக்கம் செய்ய முடியாது. அதற்கு ஓடுபதை அவசியமாகிறது.

தற்போதுள்ள போக்குவரத்து உள்கட்டமைப்புகளில் ஏற்படும் சிரமத்திற்கு இது ஒரு சாத்தியமான தீர்வாக கருதப்படுகிறது.

Full View

Tags:    

Similar News