அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்தவர் கால்பந்து வீரர்.. ஆப்கனில் துயரம் !

அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்தவர் கால்பந்து வீரர்.. ஆப்கனில் துயரம் !

Update: 2021-08-20 08:32 GMT

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து மொத்தமாக அந்நாடு தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. அதிபர் அஷரப் கனியும் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இதனால் தலிபான்கள் ஆட்சிக்கு பயந்துபோன அந்நாட்டு மக்கள் ஏராளமானோர் அங்கிருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். 

அந்த நேரத்தில் அமெரிக்கா, தனது விமானப் படையின் C17 குளோப்மாஸ்டர் விமானத்தை காபூல் விமான நிலையத்தில் நிறுத்தியிருந்தது. அப்போது அங்கு குவிந்த ஆயிரக்கணக்கானவர்களில் சிலரை ஏற்றிக்கொண்டு அந்த விமானம் புறப்பட்டது. 

அப்போது பேருந்துகளில் ஏறுவதைப் போல, விமானத்தின் டயர் மற்றும் இறக்கைகளில் சிலர் தொங்கிக் கொண்டிருந்தனர். விமானம் பறந்தபோது டயர் பகுதியில் அமர்ந்திருந்த மூன்று பேர் கீழே விழுந்து பலியாயினர். சிலரின் உடல் பாகங்ககள், டயர் பகுதியில் இருந்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆப்கா னிஸ்தான் கால்பந்து வீரர் ஸாகி அன்வாரி (Zaki Anwari) என்பது தெரிய வந்துள்ளது. தேசிய அணிக்காக விளையாடிய 19 வயதான ஜகி அன்வரியின் உடல் பாகங்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

முன்னதாக அன்வரியின் உடல் தரையிறங்கும் கியரில் சிக்கி இருந்ததால், காபூலை விட்டு புறப்பட்ட விமானம் அவசரமாக கத்தாரில் தரையிறங்கியது. . இதை அந்நாட்டு கால்பந்து விளையாட்டுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இது ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திறமையான கால்பந்து வீரரான அன்வரிக்கு நண்பர்கள் மற்றும் கால்பந்து ரசிகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

 
newstm.in

Tags:    

Similar News