பயணிகளின் கவனத்திற்கு.. வரும் 31-ம் தேதி வரை இந்த ரயில்கள் ரத்து..!

பயணிகளின் கவனத்திற்கு.. வரும் 31-ம் தேதி வரை இந்த ரயில்கள் ரத்து..!

Update: 2022-01-25 11:50 GMT

பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி - காட்பாடி, காட்பாடி-திருப்பதி, சென்ட்ரல் - பித்ரகுண்டா, பித்ரகுண்டா - சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ‘பராமரிப்பு பணி காரணமாக, திருப்பதி - காட்பாடி பயணிகள் சிறப்பு ரயில் (வண்டி எண்:07661), திருப்பதியில் இருந்து மாலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் இன்று (25-ம் தேதி) முதல் வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், காட்பாடி - திருப்பதி பயணிகள் சிறப்பு ரயில் (07662), காட்பாடியில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அத்துடன், சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் - பித்ரகுண்டா எக்ஸ்பிரஸ் (17238), சென்ட்ரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் ரயில் வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இதைப்போல், பித்ரகுண்டா - எம்ஜிஆர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (17237), பித்ரகுண்டாவில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு புறப்படும் ரயில் வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News