நாட்டில் முதல் முறை.. இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் பெண் கமாண்டோக்கள்..!
நாட்டில் முதல் முறை.. இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் பெண் கமாண்டோக்கள்..!
நாட்டின் மிக முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு மத்திய ரிசர்வ் காவல் படை சார்பில் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு பிரிவில் இதுவரை ஆண் கமாண்டோக்கள் மட்டுமே ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது அப்பிரிவில் பெண்களையும் ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இசட் பிளஸ் பாதுகாப்பு பெற்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கான பாதுகாப்பு பணியில் இந்த பெண் கமாண்டோக்கள் ஈடுபட உள்ளனர்.
முதற்கட்டமாக 32 பெண் கமாண்டோக்களுக்கு 10 வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பணியில் சேர உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் அடுத்து நடைபெற உள்ள 5 மாநில தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் தலைவர்களின் பாதுகாப்பு பணியிலும் அவர்கள் ஈடுபடுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.