வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரோனா தொற்று உறுதி..!

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Update: 2022-01-28 04:15 GMT

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.  

இதனிடையே கொரோனா பாதிப்பால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், “இன்று நான் கொரோனாவுக்கு பரிசோதனை செய்துள்ளேன். அதில் எனக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தொடர்பு கொண்ட அனைவரையும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


 

Tags:    

Similar News