முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த அதிமுக முன்னாள் எம்பி... அதிமுகவில் சலசலப்பு
முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த அதிமுக முன்னாள் எம்பி... அதிமுகவில் சலசலப்பு;
தஞ்சை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் அதிமுக முன்னாள் எம்பி பரசுராமன் முதல்வர் ஸ்டாலினை புகந்து உள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தஞ்சாவூர் ரகுமான் நகரில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக முன்னாள் எம்பி பரசுராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழ்நாட்டில் நடக்கும் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் யாரை நம்பி ஆட்சியை கொடுத்தார்களோ அவர் சிறப்பான ஆட்சியைத் தருகிறார். தளபதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக ஆட்சி செய்வதை கண்டு மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். நானும் மகிழ்ச்சியடைகிறேன்,பெருமை படுகிறேன். எப்போதும் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
மக்கள் ஆட்சி தத்துவத்தின்படி பேரறிஞர் அண்ணாவின் வழிகாட்டுதல் படி அவரின் கொள்கைகளை பின்பற்றி மிக சிறப்பாக ஆட்சி செய்கின்ற தளபதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்துவதற்கு இந்த நேரத்தில் நான் கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.