தனி கட்சி தொடங்கினார் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர்.. காங்கிரஸ்க்கு பாதிப்பா !!

தனி கட்சி தொடங்கினார் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர்.. காங்கிரஸ்க்கு பாதிப்பா !!

Update: 2021-11-02 18:14 GMT

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் அமரீந்தர் சிங். முதலமைச்சராக இருந்தாலும் இவருக்கும், அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

அவர் காங்கிரஸில் இருந்து விலகியப்போது அடுத்ததாக பாஜகவில் இணைவார் என கருதப்பட்டது. அவர் அமித் ஷா சந்தித்ததும் இந்த பேச்சு பெருசாக எழுந்தது. எனினும் தான் பாஜகவில் இணைய மாட்டேன் என கூறியிருந்தார். அதாவது, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவேன், ஆனால் பா.ஜனதாவில் இணையமாட்டேன் எனத் தெரிவித்திருந்தார். அதன்பின் புதிய கட்சி தொடங்குவேன். அதற்கான வேலைகளை தனது வழக்கறிஞர் செய்து வருகிறார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
 


இந்த நிலையில், அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார். மேலும், தான் தொடங்க இருக்கும் கட்சியின் பெயரை 'பஞ்சாப் லோக் காங்கிரஸ்' என அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். கட்சிப் பெயரை அறிவித்த அவருடன் ஆதரவு தெரிவித்து பலரும் அவரிடம் சேர்ந்து வருகின்றனர். எனினும் இதற்கு காங்கிரஸ் எதிர்வினையாற்றி வருகிறது.

அடுத்தாண்டு பஞ்சாப் மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கியிருப்பது காங்கிரஸ்க்கு சரிவு ஏற்படலாம் என பலரும் கருதுகின்றனர். ஆனால், காங்கிரஸ்க்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் பெற்றிபெரும் என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News