‘மோடியால் மட்டுமே சாத்தியம்’ என முன்னாள் நிதியமைச்சர் ட்வீட்!
‘மோடியால் மட்டுமே சாத்தியம்’ என முன்னாள் நிதியமைச்சர் ட்வீட்!
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 25 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. தில்லியில் ரூ. 834.50 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், கடந்த நவம்பர், 2020 முதல் ஜூலை, 2021 விலை ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டு ‘மோடியால் சாத்தியம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,
மோடியின் அரசின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை - 2020 முதல் 2021 வரை:
நவம்பர் 30, 2020: ரூ. 594
டிசம்பர் 01, 2020: ரூ. 644
ஜனவரி 01, 2021: ரூ. 694
பிப்ரவரி 04, 2021: ரூ. 719
பிப்ரவரி 15, 2021: ரூ. 769
மார்ச் 01, 2021: ரூ. 819
ஜூலை 01, 2021: ரூ. 834
என பதிவிட்டுள்ளார்.
Mr Modi’s government and LPG prices in 2020 to 2021:
— P. Chidambaram (@PChidambaram_IN) July 1, 2021
🔸Nov 30, 2020: ₹594
🔸Dec 1, 2020: ₹644
🔸Jan 1, 2021: ₹694
🔸Feb 4, 2021: ₹719
🔸Feb 15, 2021: ₹769
🔸Mar 1, 2021: ₹819
🔸July 1, 2021: ₹834
Modi hai, mumkin hai!