திரிணாமுல் காங்கிரசில் இணைந்த கோவா முன்னாள் முதல்வர்.!
திரிணாமுல் காங்கிரசில் இணைந்த கோவா முன்னாள் முதல்வர்.!
கோவா மாநில முன்னாள் முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான லூயிசினோ பெலேரோ அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்த லூயிசினோ, மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
பெலேரோவின் விலகலால் கோவாவில் பேரவையில் காங்கிரசின் பலம் 4-ஆகக் குறைந்துவிட்டது. 2017 கோவா பேரவைத் தோதலில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு தொடா்ந்து அக்கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனா். இதில் 2019-ல் மட்டும் 10 எம்எல்ஏக்கள் மொத்தமாக விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.