மதுரை முன்னாள் எம்பி கொரோனாவால் மரணம்..!
மதுரை முன்னாள் எம்பி கொரோனாவால் மரணம்..!
மதுரையின் முன்னாள் எம்பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 60.
காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரையில் ஏ.ஜி.எஸ்.1989 - 1991 மற்றும் 1991 - 1996 வரை எம்பியாக இருந்தவர் ராம்பாபு. 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக எம்பியாக வெற்றி பெற்றார். ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளரான இவர் கட்சியின் மாநில பொதுச் செயலராகவும் இருந்தார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். ராம்பாபுவின் தந்தை ஏ.ஜி.சுப்பராமனும் மதுரை எம்பியாக இருந்தவர்.