முன்னாள் பெப்சி தலைவர் கொரோனாவால் மரணம் !!
முன்னாள் பெப்சி தலைவர் கொரோனாவால் மரணம் !!
இயக்குனரும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான (பெப்சி) மோகன் காந்திராமன் காலமானார்.இவருக்கு வயது 89
மோகன் காந்திராமனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.இதையடுத்து சென்னையில் உள்ள அரசு மருத்துவமயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார்.
மறைந்த மோகன் காந்திராமன் பழம்பெரும் டைரக்டர் ப.நீலகண்டனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தமிழில் செல்வியின் செல்வன், வாக்குறுதி, ஆனந்த பைரவி, காலத்தை வென்றவன் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். மலையாளத்தில் விமோஜன சமரம், சுவர்ண விக்ரகம் ஆகிய படங்களை டைரக்டு செய்துள்ளார். 1994ல் ‘கில்லாடி மாப்பிள்ளை’ என்ற படத்தில் பாண்டியராஜனின் தந்தையாக நடித்திருந்தார். கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களில் பணியாற்றியுள்ளார்.