திருச்சி முன்னாள் மேயர் மாரடைப்பால் மரணம்.. அரசியல் தலைவர்கள் அஞ்சலி..!

திருச்சி முன்னாள் மேயர் மாரடைப்பால் மரணம்.. அரசியல் தலைவர்கள் அஞ்சலி..!

Update: 2022-01-27 16:16 GMT

திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர் ஜெயா இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59.

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயா. இவருடைய கணவர் எம்.எஸ்.ராஜேந்திரன், அதிமுக வழக்கறிஞர் அணி திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக உள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஜெயா, சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து அவருடைய உடல், திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனியில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்ஜோதி, வெல்லமண்டி என்.நடராஜன் உட்பட அதிமுகவினர் ஜெயாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Similar News