முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.எல்.ஜாலப்பா மரணம்.. அரசியல் தலைவர்கள் இரங்கல் !

முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.எல்.ஜாலப்பா மரணம்.. அரசியல் தலைவர்கள் இரங்கல் !

Update: 2021-12-18 10:15 GMT

முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.எல்.ஜாலப்பா மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
கோலாரில் உள்ள ஜாலப்பா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.எல்.ஜாலப்பா காலமானார். அவருக்கு வயது 96. அண்மைக்காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 10ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்த உறைந்து இருந்ததால், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

எனிலும் அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் ஜாலப்பாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவரை தீவிர கண்காணிப்பில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோம், அவை பலன் அளிக்காமல் ஆர்.எல்.ஜாலப்பா மரணம் அடைந்தார். இதனை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜாலப்பாவின் மறைவுக்கு கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் மற்றும் எடியூரப்பா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த ஜாலப்பா, கர்நாடகத்தின் முக்கியமான தலைவராக வலம் வந்தார். நாடாளுமன்றத்துக்கு 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சராக பணியாற்றினார்.

இதனிடையே, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜாலப்பா, தனது கண்களை தானம் செய்வதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதன்படி, அவர் மரணம் அடைந்த பின்னர், டாக்டர்கள் அவரது கண்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றி தானமாக பெற்றுக்கொண்டனர். 

newstm.in

Tags:    

Similar News