பிரபல நடிகை மீது மோசடி புகார்; தாய்க்கும் மகளுக்கும் போலீஸார் சம்மன்..!

பிரபல நடிகை மீது மோசடி புகார்; தாய்க்கும் மகளுக்கும் போலீஸார் சம்மன்..!

Update: 2021-08-10 05:05 GMT

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர், 1996ம் ஆண்டு தமிழில் வெளியான ‘மிஸ்டர் ரோமியா’ என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில், ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவை, ஆபாசப் படங்கள் தயாரித்த வழக்கில் மும்பை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது தாயார் சுனந்தா ஆகியோர் மீது இரண்டு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் ‘லோசிஸ் வெல்னஸ் சென்டர்’ (Iosis Wellness Centre) என்ற பெயரில் நாடு முழுவதும் பிட்னஸ் சென்டர்களை திறந்தார். இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் இந்த சென்டர்களை திறக்க பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு அந்த தொழில் காணாமல் போய்விட்டது. லக்னோவைச் சேர்ந்த ஜோத்ஜனா சவுகான், ரோஹித் வீர் சிங் ஆகியோர் நடிகை ஷில்பா ஷெட்டியிடம், பிட்னஸ் சென்டர் கிளைகளைத் தொடங்க கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும், ஆனால் கிளைகள் தொடங்கப்படவே இல்லை, அதோடு ஷில்பா ஷெட்டி பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து இருவரும் போலீஸில் புகார் செய்துள்ளனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஷில்பா ஷெட்டிக்கும் அவரது தாயார் சுனந்தாவுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். ஷில்பா ஷெட்டி ஆரம்பித்த கம்பெனியில் ஷில்பா தலைவராகவும், அவரது தாயார் இயக்குநராகவும் இருந்தனர். எனவேதான் இரண்டு பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

Similar News