12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச செல்போன்! நாளை முதல்வர் துவங்கி வைக்கிறார்!

12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச செல்போன்! நாளை முதல்வர் துவங்கி வைக்கிறார்!

Update: 2020-08-13 10:06 GMT

அரசுப் பள்ளியில் இந்த வருடம் 12ம் வகுப்பு பயிலும்  மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக செல்லிடப்பேசி வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு அறிவித்திருந்தது.

நாளை பஞ்சாப் மாநில முதல்வர்  அமரீந்தர் சிங் மாணவ, மாணவிகளுக்கு இலவச செல்போன்  வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்கிறார். 

கொரோனா தொற்று காரணமாக தற்போது நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செல்போன்கள் வாங்க முடியாத ஏழை, எளிய  மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தவிர்க்க பஞ்சாப் மாநில அரசு, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச செல்லிடப்பேசி வழங்க  முடிவெடுத்துள்ளதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்திருந்தார். நாளை மாணவர்களுக்கு செல்போன்கள் அளித்து இத்திட்டத்தைத் துவங்கி வைக்கிறார்.
 

Tags:    

Similar News