விவசாயிகள் டில்லி செல்ல இலவச டிக்கெட்…!!
விவசாயிகள் டில்லி செல்ல இலவச டிக்கெட்…!!
வரும் 19ம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 22ம் தேதி நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து, டில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் கூறியதாவது; “நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக டில்லி செல்ல விவசாயிகளுக்கு இலவசமாக பயணச் சீட்டு வழங்கப்படும்.பேருந்து மூலம் நாளொன்றுக்கு 200 பேர் டில்லி நாடாளுமன்றம் உள்ள பகுதிக்கு அனுப்பப்படவுள்ளனர். அதற்கான பயணச் செலவை சங்கமே ஏற்கும். நாடாளுமன்றத்திற்கு எதிரில் அமைதியான வழியில் போராட்டம் நடைபெறும். அது குறித்து இன்று மேலும் சில விவசாய சங்கங்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம்” என்று கூறினார்.