துபாயில் திடீரென வெடித்த சரக்கு கப்பல்... அதிர்ந்த கட்டிடங்கள்... வைரல் வீடியோ!!

துபாயில் திடீரென வெடித்த சரக்கு கப்பல்... அதிர்ந்த கட்டிடங்கள்... வைரல் வீடியோ!!

Update: 2021-07-08 21:49 GMT

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய நகரமான துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகம் உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்று. இந்த துறைமுகத்தில் நின்று இருந்த சரக்கு கப்பல் ஒன்று திடீரென வெடித்தது. இந்த பெருத்த வெடிச்சத்தத்தை கேட்டு துறைமுக அதிகாரிகள் விரைந்துள்ளனர். அப்போது கப்பல் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்பு எரிய ஆரம்பித்தது. இதனால் துறைமுகத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துபாய் நகரின் வான் உயர்ந்த கட்டிடங்களின் சுவர்களும் ஜன்னல்களும் அதிர்ந்தது.

இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். கப்பல் தீப்பிடித்து எரிந்த துறைமுகத்தில் அமெரிக்கப் போர் கப்பல்களும் நிறுத்தி வைக்கப்படும்.

இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் இதுவரை விபத்திற்கான காரணம் தெரியவில்லை. அதனால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கப்பலில் இருந்ததா என்பது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இது காண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


 

Tags:    

Similar News