சரக்கு ரயில் மோதி 2 யானைகள் பலி.. வெளியான அதிர்ச்சி வீடியோ !!
சரக்கு ரயில் மோதி 2 யானைகள் பலி.. வெளியான அதிர்ச்சி வீடியோ !!
ஒடிசா மாநிலம் குர்தா வனப்பகுதியில் சரக்கு ரயில் மோதியதில் இரண்டு யானைகள் பலியாகியுள்ளன.
ஒடிசாவின் புசந்தபூர் அருகே இரு நாட்களுக்கு முன்பு குர்தா வனப்பகுதியில் நடந்த விபத்து தான் தற்போது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு சுமார் 7 மணியளவில் வனப்பகுதியில் மூன்று யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளது. அப்போது, எதிர்பாராதவிதமாக அவ்வழியாக சரக்கு ரயில் ஒன்று வந்தது.
ஒலி எழுப்பியவாறு வந்த சரக்கு ரயில் யானைகள் மீது மோதியது. இதில், 19 வயது யானை சம்பவ இடத்திலேயே பலியாக, 10 வயதான ஆண் யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்ட நிலையில் மறுநாள் காலை அதன் உடல் கண்டெடுக்கப்பட்டது. 17 வயது யானை மட்டும் தண்டவாளத்தைக் கடந்து சென்றுவிட்டதால் காயமின்றி தப்பித்தது.
இறந்த யானைகளுக்கு உடற்கூராய்வு செய்ததில், இரண்டுமே உள்ளுருப்பு காயத்தால் பலியாகியிருப்பது தெரிய வந்தது. இதற்கு யானைகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ரயில்வே நிர்வாகத்தினர் கூறுகையில், ரயில் ஓட்டுநருக்கு, யானைகள் கடக்கும் பகுதி என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டும், யானைகளை கண்காணிக்கும் குழுவினர், அதே வனப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலும் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
விபத்து நேரிட்டபோது பதிவான விடியோ ஒன்று தற்போது வேகமாகப் பரவி வருகிறது.
newstm.in