கார் விபத்தில் தோழி மரணம்.. நடிகை யாஷிகா ஆனந்த் மீது மேலும் ஒரு நடவடிக்கை !!

கார் விபத்தில் தோழி மரணம்.. நடிகை யாஷிகா ஆனந்த் மீது மேலும் ஒரு நடவடிக்கை !!

Update: 2021-07-26 18:57 GMT

நடிகை யாஷிகா ஆனந்த் இரவு பார்ட்டிக்கு சென்று விட்டு காரில் திரும்பியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் யாஷிகா ஆனந்த்க்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், யாஷிகாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலத்தில் காரை ஓட்டி வந்தது யாஷிகா தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகை யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாகவும், அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து கார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்துள்ளனர். 

newstm.in


 

Tags:    

Similar News