பள்ளி மாணவியுடன் உல்லாசம்.. கணக்கு வாத்தியாரை கோர்த்துவிட்ட காதலி.. சிக்கியது புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் !!
பள்ளி மாணவியுடன் உல்லாசம்.. கணக்கு வாத்தியாரை கோர்த்துவிட்ட காதலி.. சிக்கியது புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் !!
மாணவியுடன் உறவு வைத்திருந்ததாக கணித ஆசிரியர் மீது அவரது காதலி போலீஸில் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தின் கிழக்கு லொதியன் பகுதியில் ஒரு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக 31 வயதான ரோஸ் ஸ்பிட்டல் என்பவர் பணியாற்றி வருகிறார். ஆசிரியரான இவர் பள்ளி மாணவிகளிடம் நெருங்கி பழங்கியதாக ஏற்கனவே புகார் உள்ளது. இதில் ஒரு மாணவியுடன் மட்டும் நெருக்கம் அதிகமாகி தனிப்பட்ட முறையில் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு அப்பள்ளியில் படித்த 18 வயது பெண்ணுடன் ஆசிரியர் ரோஸ் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அதே வேளையில் ஆசிரியர் ரோஸுக்கு கிம் ஸ்மித் (32) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ரோஸின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை அறிந்த காதலி கிம், அவருடைய மெயில் ஐடியை அதிரடியாக சோதனை செய்துள்ளார். அப்போது பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் ரோஸுக்கும் அந்த மாணவிக்கும் இடையே 800-க்கும் மேற்பட்ட இமெயில்கள் மாறி மாறி அனுப்பப்பட்டன. அதில் செக்ஸ் தொடர்பான உரையாடல்களும் இருந்துள்ளன.
அதோடுமட்டுமல்லாமல், அந்த மாணவியின் நிர்வாண புகைப்படங்களும் அதில் இருந்துள்ளன. இதுகுறித்து ரோஸிடம் கிம் கேட்ட போது காதலர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் காவல்துறையில் புகார் அளிக்கவேண்டாம் பள்ளி நிர்வாகத்திடம் சொல்ல வேண்டாம் என்றும் ரோஸ் கெஞ்சியதாக தெரிகிறது.
எனினும் கிம் கொடுத்த புகாரின் பேரில் காதலர் ரோஸ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆசிரியரும் மாணவியும் நெருக்கமாக இருந்ததற்கான ஆதரம் இல்லை. ஆனால், அந்த மாணவிக்கு ஆசிரியர் ரோஸ் முத்தம் கொடுத்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், ரோஸும் மாணவியும் இரு முறை தனியாக உறவு கொண்டுள்ளதாகவும் கிம் குற்றம்சாட்டியுள்ளார். அந்த மாணவியுடன் இன்னமும் அவர் தொடர்பில் உள்ளாராம். ரோஸின் மீது மாணவிகளுக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தது எனக்கு தெரியும். ஆனால் அதற்கு ரோஸ் இடம் கொடுக்க மாட்டார் என நினைத்தேன் என கிம் கண்ணீருடன் தெரிவித்தார். இந்த வழக்கு தற்போது ஸ்காட்லாந்து நாட்டையே உலுக்கியுள்ளது.
newstm.in