இன்று முதல் டாஸ்மாக் கடைகள் 12 மணி வரை மட்டுமே செயல்படும்!

இன்று முதல் டாஸ்மாக் கடைகள் 12 மணி வரை மட்டுமே செயல்படும்!

Update: 2021-05-06 06:10 GMT

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே, பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையிலும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 20,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இன்று முதல் அனைத்து கடைகளும் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று முதல் செயல்படும் நேரத்தை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் தற்போது பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மூடப்படுகிறது. தற்போதைய சூழலில் 4 மணி நேரம் மட்டுமே மது விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆந்திராவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அங்குள்ள மதுக்கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.அதே போல் தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் 4 மணிநேரம் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News