பிரதமர் மோடி உரையின் முழுத் தொகுப்பு!

பிரதமர் மோடி உரையின் முழுத் தொகுப்பு!

Update: 2021-06-08 10:23 GMT

இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றியுள்ளார்.அதன்படி

*இந்தியாவில் கடந்த 100 வருடங்களில் ஏற்பட்ட மிகவும் மோசமான பெருந்தொற்று கொரோனா. இந்த நெருக்கடி காலத்தில் நமது நாடு ஒற்றுமையுடன் நின்றது.
*மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நாட்டு மக்களின் நலன் காக்கவும் புதிய மருத்துவமனைகளும், சுகாதார உள்கட்டமைப்புக்களும் நிறுவப்பட்டுள்ளன.
*முழு உடல் கவச உடைகளின் உற்பத்தி, ஆக்சிஜன் உற்பத்தி விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
*அத்தியாவசிய மருந்து பொருட்களின் உற்பத்தி மிகக் குறைந்த காலத்தில் அதிகப்படுத்தப்பட்டது.
*தடுப்பூசி மட்டும் தான் இந்த தொற்றுக்கு எதிரான ஒரே கேடயம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உலகளவில் உயிர்களைப் பாதுகாத்து வருகின்றன.

  • 50-60 ஆண்டுகால வரலாற்றில் வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசியை இந்தியா பெற்று வந்தது.
  • ஓராண்டு காலத்திற்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.
  • தடுப்பூசிகளின் சாத்தியக் கூறுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவந்த காலத்திலேயே இந்தியாவில் தடுப்பூசியின் சேமிப்பு மற்றும் விநியோகக் கட்டமைப்புக்கள் உருவாக்கபட்டன.
  • இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பு காரணமாக, ஓராண்டுக்குள், இந்தியா ஒன்றல்ல, இரண்டு தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் சுமார் 23 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
  • தடுப்பூசியை உருவாக்கும் பணியில் இன்று 7 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மூன்று சோதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
  • நாசி வழியாக செலுத்தும் தடுப்பூசிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும் சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
  • இந்தியாவில் முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
  • ஜூன் 21 முதல் 18 மற்றும் அதற்கு மேல் உள்ள வயதினருக்கான இலவச தடுப்பு மருந்துகளை மத்திய அரசே மாநிலங்களுக்கு வழங்கும்.
  • 25% சதவீத தடுப்பு மருந்துகளை தனியார் மருத்துவமனைகள் வாங்கிக் கொள்ளலாம். மாநில அரசுகள் வசம் இருந்த 25% தடுப்பூசி சம்பந்தமான பொறுப்புகள், இனி மத்திய அரசால் கவனிக்கப்படும்
  • நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசு இலவசமாக தடுப்பு மருந்தை வழங்கினாலும், கட்டணத்தை செலுத்த விரும்புவோர் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
  • பிரதமரின் ஏழைகள் நலன் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் தீபாவளி வரை ரேஷனில் இலவசமாக பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
  • பெருந்தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை. நமது மொத்த சக்தியையும் பயன்படுத்தி கொரோனாவிற்கு எதிராக நாம் போராட வேண்டும். வைரசை கட்டாயம் வெல்வோம்
  • தடுப்பூசிகளை ஒரு டோசுக்கு ரூ. 150ஐ அதிகபட்ச சேவை கட்டணமாக தனியார் மருத்துவமனைகள் வசூலித்துக் கொள்ளலாம். அதனை கண்காணிக்கும் பணி மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News