முழு ஊரடங்கு : பேருந்துகள் ஓடாது – தமிழக அரசு அறிவிப்பு!!
முழு ஊரடங்கு : பேருந்துகள் ஓடாது – தமிழக அரசு அறிவிப்பு!!
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது பேருந்து, மெட்ரோ ரயில் சேவைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் பரவலைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு நேரத்தில் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை. ஆனாலும் இரவு நேர ஊரடங்கின் போது அத்தியாவதிய சேவைகள் கிடைக்கும். மாநிலத்திற்குள் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதி. பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், மருத்துவமனை, மருந்துக் கடைகள், ஆய்வகங்கள், அமரர் ஊர்தி சேவைகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.
உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட அனுமதி. அவர்கள் நிறுவனங்கள் வழங்கியுள்ள அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
ஞாயிறு அன்று முழு முடக்கம் அமல்படுத்தப்படும். அன்றைய தினம் பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை கிடையாது. ஆனாலும் மருந்துவமனைகள், மருந்தகங்கள், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து, பெட்ரோல் மையங்கள் செயல்படும்.
ஞாயிறு அன்று உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவை மட்டும் உண்டு. உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் இயங்கலாம். மற்ற மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in