9 நாட்களுக்கு முழு ஊரடங்கு - முதல்வர் பினராயி விஜயன் !!
9 நாட்களுக்கு முழு ஊரடங்கு - முதல்வர் பினராயி விஜயன் !!
கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. முழு முடக்கம் அமல்படுத்தினால் தான் நோயை கட்டுப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் நோய் தாக்கத்திற்கு ஏற்ப பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மளிகை, காய்கறி கடைகள், டீக்கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
கேரளாவை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 40 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்போவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்
கேரளாவில் வரும் 8-ம் தேதி காலை 6 மணி முதல் 16-ம் தேதி வரை 9 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறினார். மேலும் மக்கள் தேவையில்லாமல் வெளியே வர கூடாது, மீறுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
newstm.in