நாளை இரவு முதல் முழு ஊரடங்கு...! கர்நாடகா அரசு அதிரடி!
நாளை இரவு முதல் முழு ஊரடங்கு...! கர்நாடகா அரசு அதிரடி!
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக பரவி வருகிறது.மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு முறைகளை தீவிரமாக செயல்படுத்தி வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார துறை கவலை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் பாதிப்பு இருந்த போதிலும் குறிப்பிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. அந்த வகையில் , கர்நாடகாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.இதுகுறித்து விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில் 'கர்நாடகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 27 இரவு 9 மணி முதல் மே10ம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு என அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஊரடங்கு காலத்தில் அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி எனவும் தெரிவித்துள்ளார்.அரசின் இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.