தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்..!! காய்கறி, இறைச்சி கடைகளுக்கு அனுமதி..!!

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்..!! காய்கறி, இறைச்சி கடைகளுக்கு அனுமதி..!!

Update: 2022-01-23 04:00 GMT

தமிழகத்தில் தற்போது 30 ஆயிரத்திற்கும் மேல் கொரோனாபாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தினசரி இரவுநேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 9 மற்றும் ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதேபோன்று தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும். 
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று இரவு முதல் சுமார் 30 மணி நேரத்திற்கு மேல் ஊரடங்கு அமலானது.
 
இந்த முழு ஊரடங்கின் போது எவை இயங்கும்? எவை இயங்காது..?

 ஊரடங்கின் போது இயங்குபவை:-
 
# மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் இயங்கும்.

# உணவகங்கள் பார்சல் வாங்கிக்கொள்ளும் முறையில் செயல்படும்.

# அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியூர் செல்வோர் வாடகை வாகனங்களில் பயணம் மேற்கொள்ளலாம்.

# காய்கறி கடை, மீன் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படும்.

# திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு திருமண பத்திரிகை காண்பித்து செல்லலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கின் போது இயங்காதவை

# பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயங்காது.

# மதுபான கடைகள், மொபைல் கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

# அத்தியாவசியம் அற்ற கடைகள் எதுவும் இயங்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News