இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. சுடுகாடுகளில் இடமில்லாமல் உடல்கள் பொது இடங்களில் வைத்து எரியூட்டப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வரும் சூழ்நிலையிலும் அந்த முயற்சிகளுக்கு மிகப்பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. 

அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு தான் ஒரே வழி என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவித்துவிட்டு ஊரடங்கை அமுல்படுத்தலாம். மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் கொரோனவால் பலர் உயிரிழந்து வரும் நிலையில் முழு ஊரடங்கு மட்டுமே தீர்வு என பதிவிட்டுள்ளார். 


 

Tags: