#BREAKING:- கேரளாவில் வரும் 6-ம் தேதி முழு ஊரடங்கு.. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி.. முதல்வர் அறிவிப்பு..!
#BREAKING:- கேரளாவில் வரும் 6-ம் தேதி முழு ஊரடங்கு.. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி.. முதல்வர் அறிவிப்பு..!
“வரும் 6-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இதன்போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை போல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என, முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று (31ம் தேதி), கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், துபாயில் உள்ள முதல்வர் பினராயி விஜயன் ஆன்லைன் மூலமாக கலந்து கொண்டார்.
கூட்டத்திற்கு பின்னர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “கேரளாவில் வரும் 6-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இதன்போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை போல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டால் அந்த மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது, தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும்.
மாநிலத்தில் நேற்று 42 ஆயிரத்து 152 பேருக்கு கொரோனா.தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 81 நோயாளிகள் மரணம் அடைந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 395 ஆக உயர்ந்து உள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.