ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு- ஆனால்... பிரதமர் எடுத்த திடீர் முடிவு !

ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு- ஆனால்... பிரதமர் எடுத்த திடீர் முடிவு !

Update: 2022-01-07 07:30 GMT

தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி விட்டது. ஒமைக்ரான் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ் தொற்று, டெல்டா வகை கொரோவை விட மிகவும் வேகமாகப் பரவக் கூடியது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று கோரத் தாண்டவமாடி வருகிறது. இதன் காரணமாக நெதர்லாந்து நாட்டில் வரும் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்தார்.
 
இதன் காரணமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையே முழு ஊரடங்கு அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நெதர்லாந்து நாட்டு மக்கள் சாலைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வரும் 14 ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், வரும் 10 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாக அந்நாட்டு கல்வித் துறை அமைச்சர் அரி ஸ்லோப் அறிவித்துள்ளார். மேலும், தொழிற்கல்வி பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படாது என்றும், அதற்கு பதிலாக குறைந்தபட்சம் 17 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
முழு ஊரடங்கு 14 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், வரும் 10 ஆம் தேதியே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

Tags:    

Similar News