வாடகை வீட்டில் நடந்த சூதாட்டம்: 11 பெண்கள் சிக்கினர் !
வாடகை வீட்டில் நடந்த சூதாட்டம்: 11 பெண்கள் சிக்கினர் !
சென்னையில் வீடு வாடைக்கு எடுத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 11 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள எஸ்.எம்.நகரில் ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக சேத்துப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். மேலும் குறிப்பிட்ட வீட்டை கண்காணித்து வந்தனர். அப்போது அந்த வீட்டில் பெண்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரிந்தது.
பின்னர் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்களையும், அண்ணா நகரைச் சேர்ந்த துரைராஜ் என்பவரையும் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, இரண்டு சீட்டுக் கட்டுகள் மற்றும் 18 ஆயிரத்து 680 ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டன.
வாடகைக்கு வீடு எடுத்து 11 பெண்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். நீண்ட நாட்களாக இதுபோல் சூதாட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. வேறு எங்கும் இதுபோன்று சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனரா என்ற கோணத்திலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in