தளபதி விஜய் பட கதையை லீக் செய்த கெளதம் மேனன்! கொண்டாடும் ரசிகர்கள்!

தளபதி விஜய் பட கதையை லீக் செய்த கெளதம் மேனன்! கொண்டாடும் ரசிகர்கள்!

Update: 2021-03-17 15:48 GMT

பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் நடிப்பில் உருவாக்கப்பட திட்டமிட்டு, பிறகு கைவிடப்பட்ட ’யோஹன் அத்தியாயம் ஒன்று’ படத்தின் கதையை தற்போது வெளியிட்டுள்ளார் அப்பட இயக்குநர் கவுதம் மேனன்.

தமிழ் சினிமாவில் பலரும் விரும்பக்கூடிய இயக்குநராக உள்ளார் கவுதம் மேனன். பல்வேறு கதையம்சங்கள் கொண்ட படங்களை இவர் இயக்கியுள்ளார். எனினும், கவுதமின் கிரைம் த்ரில்லர் வகை படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு  விஜய் நடிப்பில் ‘யோஹன்’ என்கிற படத்தை இயக்குவதாக அறிவித்தார் கவுதம் மேனன். இதற்கான போட்டோஷூட்டும் நடத்தப்பட்டு படங்கள் வெளியாகின. ரசிகர்களிடையே தாறுமாறான எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அப்படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பிரபல யூ-டியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘யோஹன்’ படம் கைவிடப்பட்டதற்கான காரணங்களை தெரிவித்துள்ளார் கவுதம் மேனன். அதனுடன் படத்தின் கதையையும் அவர் வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விமான வெடிப்பு சம்பவத்தில் காதலி இறந்துவிடுகிறாள். இதை தெரிந்துகொள்ளும் யோஹன், காதலியின் சாவ்க்கு காரணமானவர்களை பழிவாங்குகிறான். சிறிது காலம் கழித்து அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வில் யோஹன் பணிக்கு சேருகிறான். அதை தொடர்ந்து சிறப்பான உளவாளியாக மாறுகிறான் யோஹன். அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே ‘யோஹன்: அத்தியாயம் ஒன்று” படத்தின் கதை என கவுதம் மேனன் அந்த பேட்டியில் விவரித்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு இந்த கதையை கேட்ட விஜய் மிகவும் ஆர்வமாக படத்திற்குள் வந்தார். முழு கதையையும் அவரிடம் கொடுக்கப்பட்ட போது, யோஹன் படத்தை துவங்குவதற்கு இது சரியான தருணம் கிடையாது என விஜய் கூறியதாக அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் கவுதம் மேனன். அதன் காரணமாக அந்த படம் அப்போது கைவிடப்பட்டுள்ளது. இருந்தாலும் எதிர்காலத்தில் விஜய்யுடன் பணியாற்ற அனுபவம் அமையும் என்று அப்போது நினைத்ததாகவும், அந்த நம்பிக்கை தற்போது வரை மாறவில்லை எனவும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News