5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து! அமைச்சர் அறிவிப்பு!
இன்று (04/02/2020) காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமை செயலகத்தில் நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டம் முடிந்த நிலையில், 5வது மற்றும் 8வது வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 5 வது மற்றும் 8வது வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்த நிலையில், பொது தேர்வுக்கான அட்டவணை எல்லாம் வெளியான நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருப்பது மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று 5வது மற்றும் 8வது வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும், பழைய தேர்வு முறையே தொடரும் என்றும் அமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
newstm.in