5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்து புது அறிவிப்பு!  

5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்து புது அறிவிப்பு!

Update: 2020-01-21 18:21 GMT

தமிழகத்தில், கட்டாய தேர்ச்சி முறை சட்டத்திருத்தத்தின் படி இந்த  5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. 

மத்திய அரசின் அறிவிப்பின் இந்த கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்றும், அதற்காகப் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவை கட்டாயம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.  

இந்த பொதுத்தேர்வுகளை மாணவர்கள், அவர்கள் படித்து வரும் பள்ளிகளில் எழுதக் கூடாது என்ற பதற்றம் பெற்றோர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் இருந்து வந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பொதுத்தேர்வுகளை அவர்கள் தற்போது படித்து வரும் பள்ளிகளிலேயே எழுதலாம் என்றும், இது குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

Tags:    

Similar News