ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் மொபைல் கட்டணங்களை உயர்த்தின. இந்நிலையில் ஜியோ மீண்டும் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஒரு ஜி.பிக்கு தற்போது ரூ.15 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அது 20 ரூபாயாக உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வு ஆறு மாத காலத்திற்குள் படிப்படியாக இருக்கும் என்று டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்திடம், ஜியோ தெரிவித்துள்ளது.


இந்திய தொலைத் தொடர்பு துறையில் ஜியோ மட்டும் பணம் சம்பாதிக்கிறது. ஆனால் வோடபோன், ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் நிலுவைத் தொகையை செலுத்த போராடிக் கொண்டு இருக்கின்றன. ஜியோ அல்லாத பயனர்களை அழைப்பதற்காக ஜியோ தனது பயனருக்கு நிமிடத்திற்கு 60 பைசா கட்டணம் வசூலிக்கிறது. ஆனால் ஏர்டெல் மற்றும் வோடபோன் தங்கள் பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags: