உடனே தடுப்பூசி போடுங்க.. சொத்து வரியில் சலுகை பெறுங்கள்.. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு !!

உடனே தடுப்பூசி போடுங்க.. சொத்து வரியில் சலுகை பெறுங்கள்.. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு !!

Update: 2021-04-12 09:10 GMT

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதிலும் மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தலைநகர் டெல்லியில்  கடந்த சில நாட்களாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது. தொற்றுநோய் பரவலை தடுக்க முதல்வர் கெஜ்ரிவால் அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியது. எனினும் மக்கள் ஆர்வம் காட்டாததால் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், வடக்கு டெல்லி மேயர் ஜெய் பிரகாஷ், தடுப்பூசி போட்டுக் கொண்டால் சொத்து வரியில் சலுகை வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், வீட்டின் உரிமையாளர் மற்றும் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றை வழங்க வேண்டும். பின்னர் சொத்து வரி சலுகையை பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும், இதற்காக மாநகராட்சிக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடுகளின் உரிமையாளர்கள் மற்றும் வரி செலுத்துபவர்களுக்கு சொத்து வரியில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். இந்த சலுகை வரும் ஜூன் 10ஆம் தேதி வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

Tags:    

Similar News