காதலன் வீட்டார் காதலை ஏற்காததால் இளம்பெண் தற்கொலை!!

காதலன் வீட்டார் காதலை ஏற்காததால் இளம்பெண் தற்கொலை!!

Update: 2022-01-23 19:44 GMT

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காதலை ஏற்றுக்கொள்ளாததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பணகுடி மேரிபாத்திமா தெருவைச் சேர்ந்த மரிய கென்ஸ்லின் என்பவர் நகார்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அவர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் ஆசிரியர் மரிய கென்ஸ்லின் தனது உறவுக்கார இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த காதலுக்கு அந்த இளைஞரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சில நாட்களாகவே மரிய கென்ஸ்லின் மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில்தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

newstm.in

Similar News