திருமணத்திற்கு முன்பு வாழ்க்கையை தொலைத்த பரிதாபம் - காதலன் வீட்டு முன்பு காதலி தர்ணா...!
திருமணத்திற்கு முன்பு வாழ்க்கையை தொலைத்த பரிதாபம் - காதலன் வீட்டு முன்பு காதலி தர்ணா...!
நெல்லை மாவட்டம் திசையன்விளை முருகேசபுரத்தை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மகள் சசிகலா (வயது 29). இவரது கணவர் மரணம் அடைந்துவிட்டார். கடந்த 5 வருடங்களாக திசையன்விளை-இட்டமொழி சாலையில் உள்ள கட்டேரி பெருமாள் மகன் முத்து என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். இதனால் சசிகலா கர்ப்பம் அடைந்தார். தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காதலன் முத்துவிடம் கூறியுள்ளார். அதற்கு முத்து மறுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சசிகலா நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். அதன்பேரில் திசையன்விளை போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஜனவரி 10-ம் தேதி சசிகலாவை திருமணம் செய்துகொள்வதாக எழுதி கொடுத்துவிட்டு அதன் பின்பு திருமணம் செய்துகொள்ளாமல் தலைமறைவு ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த பெண் தனது காதலன் முத்து வீட்டு முன்பு இன்று காலை முதல் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.