நள்ளிரவில் பெண் தோழிகள், விடிய விடிய குடி, நடனம்... சிக்கலில் நடிகர் விஷ்ணு விஷால்!
நள்ளிரவில் பெண் தோழிகள், விடிய விடிய குடி, நடனம்... சிக்கலில் நடிகர் விஷ்ணு விஷால்!
தமிழ் திரையுலகில், வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஷ்ணு விஷால். இப்படத்தைத் தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, மாவீரன் கிட்டு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ரமேஷ் குட்வாலாவின் மகனான விஷ்ணு விஷால். சென்னையில் முக்கிய பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவர் வசித்து வரும் வீட்டில் வரம்புமீறி செயல்பட்டுள்ளார் என்றும், இது தொடர்பாக செக்யூரிட்டி அந்த அறைக்கு சென்று சொன்ன போதும் நிறுத்தவில்லை என்றும் இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு நல சங்க நிர்வாகி, இது தொடர்பாக, காவல்துறையின் ஹெல்ப் லைன் 100-க்கு அழைத்து புகார் அளித்துள்ளார் என்றும் தகவல் வெளியானது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளர். அதில், நடிகர் விஷ்ணு விஷால் குடித்து விட்டு, தனது அறையில் மிக சத்தமாக இசைக்கச்சேரி கேட்பது, நண்பர்களை வரவழைத்து பார்ட்டி வைத்து கும்மாளம் போடுவது, இது தொடர்பாக யாராவது கேட்டால் அவர்களை தகாத வார்த்தைகளில்திட்டுவது என எல்லை மீறி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் புகாரில், தினந்தோறும் பல பெண்களும், ஆண்களும் விஷ்ணு விஷால் வீட்டிற்கு நள்ளிரவில் வந்து செல்கின்றனர். விடிய விடிய பார்ட்டி நடக்கிறது. சத்தமாக பாடல் ஒலிக்க செய்து நடனமாடி அதிகாலையில் கிளம்பிச் செல்கிறார்கள். இது தொந்தரவாக இருக்கிறது என எச்சரித்தால், என் தந்தை ஓய்வு பெற்ற போலீஸ். நீ எந்த காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் புகார் செய். பார்த்துக் கொள்கிறேன் என மிரட்டுகிறார் என்று அந்த குடியிருப்புவாசிகள் புகாரளித்திருக்கிறார்கள்.
பொதுமக்களுக்கு தொல்லை தரும் இது போன்ற சம்பவங்களில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே காவல்துறையினருக்கு மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டு குறித்து, நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார். அதில், எனது அடுத்த படத்திற்காக கடினமாக உடற்பயிற்சி செய்து வருகிறேன். டயட்டில் உள்ளேன். அப்படி இருக்க ஒரு நபர் எப்படி மது அருந்துவார்? என்னை இந்த வீட்டை விட்டு காலி செய்ய சிலர் சதி செய்கின்றனர் என விளக்கம் கொடுத்துள்ளார்.