#BREAKING: கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகல்! ரசிகர்கள் அதிர்ச்சி!!
#BREAKING: கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகல்! ரசிகர்கள் அதிர்ச்சி!!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி குறைந்த இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீர்ர் என்ற சாதனை படைத்துள்ளார். அதேசமயம், அவரது தலைமையிலான இந்திய அணி அஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் வென்று சாதித்தது.
சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் 2 போட்டிகளில் வென்றது. அடுத்து, அவரது தலைமையிலான ஆர்.சி.பி அணி மீதமுள்ள போட்டிகளில் வெற்றிவாகை சூட பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும், விரைவில் டி-20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் டி-20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதில், டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரிடம் கூறிவிட்டேன். மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்படுவேன் என்றும், டி20 போட்டிகளில் ஒரு வீரராக விளையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.