இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக தங்கம் தான் பெரும்பாலானோரின் முதலீடாக இருந்து வருகிறது. வீடுகளில் ஏதாவது கஷ்டம் வரும்போது கைகொடுக்கும் துணை என்றும் தங்கம் கருதப்படுகிறது. தங்க நகைகளை அணிவதோடு பெண்கள் அவசரகாலத்தில் உதவிக்காவும் அதை பாதுகாத்து வைக்கிறார்கள்.
அண்மை காலத்தில் தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருப்பதால், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும், ஏழைகளுக்கும் இது மிகப் பெரிய சுமையாக அமைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,480-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ரூ.4,435-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 73,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து ரூ.73,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.