தொடர் சரிவில் தங்கம் விலை - மக்கள் குஷி !!

தொடர் சரிவில் தங்கம் விலை - மக்கள் குஷி !!

Update: 2021-02-12 16:45 GMT

சென்னையில் தங்கம் விலை மீண்டும் 36 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதனால், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.35,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை அடுத்தடுத்து உயர்ந்து கொண்டே சென்றது. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி உச்சம் தொட்டது. 

இந்நிலையில், தங்கம் விலை தற்போது பெரிய அளவில் குறைந்து வருகிறது. இதுவரை இல்லாதவிற்கு மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. அதாவது, கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ஒரு சவரன் ரூ.35,640 -க்கு விற்பனையானது. பின்னர், அடுத்த சில  நாட்களில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. பிப்ரவரி 6-ம் தேதி அன்று ஒரு சவரன் தங்கம் விலை 35,752 ரூபாய்க்கும், 8-ம் தேதி அன்று 35,720 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதனிடையே, 9-ம் தேதி அதிரடியாக உயர்ந்து 36,296 ரூபாய்க்கு விற்பனையானது. 10-ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் 36,176 ரூபாயாகவும், பிப்ரவரி 11-ம் தேதியான நேற்று ஒரு சவரன் 36,192 ரூபாய் ஆகவும் குறைந்தது.

இந்நிலையில் சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 328 குறைந்து ரூ.35,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.41 குறைந்து, ரூ.4,483 ஆக விற்பனையாகிறது. அதேநேரத்தில், வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து 73,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News