தொடர்ந்து சரிந்த தங்கம் விலை! இவ்வளவு வீழ்ச்சியா? மேலும் குறைய வாய்ப்பு!

தொடர்ந்து சரிந்த தங்கம் விலை! இவ்வளவு வீழ்ச்சியா? மேலும் குறைய வாய்ப்பு!

Update: 2021-02-04 08:30 GMT

தங்கத்தின் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ.192 குறைந்த நிலையில் மாலை மீண்டும் சவரனுக்கு  ரூ.96 குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,232-க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 4,565க்கு விற்பனையான நிலையில், நேற்று மாலை ரூ.36 குறைந்து ரூ. 4,529க்கு விற்பனையாகிறது.

அதாவது, ஒரு சவரன் தங்கம் விலை நேற்று காலை  ரூ. 192 குறைந்து ரூ. 36,328-க்கு விற்பனையான நிலையில் மாலை மேலும் ரூ.96 குறைந்து ரூ.36,232க்கு விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை காலை 73,600 ரூபாயாக இருந்த நிலையில், மாலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ.73,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து விலை ஏற்றத்துடன் இருந்த தங்கத்தின் விலை தற்போது 37,000க்கு கீழ் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Tags:    

Similar News