பெட்ரோலை தொடர்ந்து மக்களை திணறடிக்கும் தங்கத்தின் விலை..!!
பெட்ரோலை தொடர்ந்து மக்களை திணறடிக்கும் தங்கத்தின் விலை..!!;
நம் நாட்டு மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது என்றால் அது தங்கம் என்றே கூறலாம். பழங்காலத் தொட்டே தங்கத்தை வாங்குவது என்பது ஒரு சேமிக்கும் பழக்கமாக இருந்து வருகிறது.அத்தகைய சிறப்பு வாய்ந்த தங்கத்தை வாங்குவதற்கும், பணத்தை சேமிப்பதற்கும் தங்க நகை சேமிப்பு திட்டங்கள் உதவுகின்றன.
மக்கள் சிறுக சிறுக பணத்தை சேர்த்து தங்கத்தில் முதலீது செய்கின்றனர்.ஆனால் இன்றைய சூழலில் மக்கள் தாங்கள் சேமித்த பணத்தில் தங்களுக்கு விரும்பிய டிசைனயில், விரும்பிய எடையில் வாங்க முடியுமா என்றால் அது கடினம் என்றே கூறலாம். ஏனென்றால் தங்கத்தின் விலை தினம் தினம் ஏறுமுகத்தில் இருப்பதே இதற்கு காரணம்.
இந்த மாத தொடக்கத்தில் அதாவது அக்டோபர் 1-ம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,368 க்கு விற்பனையான நிலையில் இன்று அக்டோபர் 26 ஆம் தேதி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,538 க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,304-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ரூ.4,538-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை மாலை 70,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து ரூ.70,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.