தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,560-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ரூ.4,445-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 73,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ.73,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.