தங்கம் விலை சவரனுக்கு 216 ரூபாய் குறைவு !!

தங்கம் விலை சவரனுக்கு 216 ரூபாய் குறைவு !!

Update: 2021-05-27 11:11 GMT

சமையல் எரிவாயு, பெட்ரோல் என்று தினம் தினம் விலையேற்றத்தில் சிக்கித் திணறும் பொதுமக்கள் உயர உயர பறக்கும் தங்கத்தின் விலையையும் அதிர்ச்சியுடனேயே பார்த்து வருகின்றனர்.உலகம் முழுவதுமே கொரோனா ஊரடங்கு, பல வணிக கட்டிடங்களும், நகைக்கடைகளும் மூடப்பட்டு இருந்தாலும் தங்கத்தின் விலை பெரிய அளவில் குறையவில்லை. 

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 216 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,000-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 27 ரூபாய் குறைந்து, ரூ.4,625-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 77,100 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,100 ரூபாய் குறைந்து ரூ.76,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News