தங்கம் விலை கிராமுக்கு இன்றும் மேலும் குறைவு ... மக்கள் குஷி !!

தங்கம் விலை கிராமுக்கு இன்றும் மேலும் குறைவு ... மக்கள் குஷி !!

Update: 2021-03-31 13:37 GMT

சமையல் எரிவாயு, பெட்ரோல் என்று தினம் தினம் விலையேற்றத்தில் சிக்கித் திணறும் பொதுமக்கள் உயர உயர பறக்கும் தங்கத்தின் விலையையும் அதிர்ச்சியுடனேயே பார்த்து வருகின்றனர். ஊரடங்கின் போது ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. கொரோனா பொதுமுடக்கத்தின் போது உலக நாடுகளின் சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக விலை உயர்ந்ததாக கூறப்பட்டது. பொதுமுடக்கத்திற்கு பிறகு விலை குறையும் என்றும் கணிக்கப்பட்டது. அதே போல் தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.33,392-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து, ரூ.4,174-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 68,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,400 ரூபாய் குறைந்து ரூ.67,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News